ரூபாய் 3000 ஊக்கத் தொகையுடன் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

 ரூபாய் 3000 ஊக்கத் தொகையுடன் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி


ரூ.3000/- ஊக்கத்தொகையுடன் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

காமராஜர் பல்கலையில் ரூ.3000/- ஊக்கத்தொகைஉணவுப்படிஇலவச தங்குமிடம் ஆகியவற்றுடன் கூடிய IAS/IPS போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இளைஞர்கள் நலப் படிப்பியல் துறையின் மூலம் தமிழாண்டு அரசு நிதியுதவி மூலம் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமியில் IAS/IPS போன்ற பதவிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு ஆண்டு தோறும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதுதற்போது UPSC Prelims 2021ம் ஆண்டிற்கான தேர்வுகளுக்குரிய இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்ட உள்ளதுஅதற்கான தெரிவுத்தேர்வு வரும் ஜனவரி 31ம் தேதி நடைபெற உள்ளது.

வயது: 01.08.2021 அன்று 21 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இந்த பயிற்சி வகுப்புகள் 15.02.2021 அன்று முதல் 26.06.2021 அன்று வரை நடைபெறும்இதில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்இலவச தங்குமிடத்துடன் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்த நுழைவுத்தேர்வில் இந்திய வரலாறு மற்றும் தேசிய இயக்கம்இந்திய மற்றும் உலக புவியியல்இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறைபொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிபொது அறிவியல்நடக்குபு நிகழ்வுகள்சுற்றுப்புற சூழ்நிலை தொடர்பான பொது விவாதங்கள்உயிரின பரிணாம வளர்ச்சிபருவநிலை மாற்றங்கள்ஆங்கிலம் மற்றும் பொதுத்திறனறிவுத் தேர்வு போன்றவற்றில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் ரூ.5/- அஞ்சல் முத்திரையிடப்பட்ட அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.


Website link - https://mkuniversity.ac.in/new/News_Events

Notification & Application link - 

https://mkuniversity.ac.in/new/notification_2020/UPSC%20PRELIMS%202021%20BATCH%20-%20SCHEDULE%20OF%20PROGRAMS.pdf



Comments

Popular posts from this blog

TNRD Coimbatore Recruitment 2021 Apply Offline for 17 Overseer/ Junior Drafting Officer posts at coimbatore.nic.in

SSC.ல் பணியிடங்கள்-6506 vacancies